போலீஸ் ஸ்டேசனுக்கே தீவைத்த மர்ம நபர்கள்… வழக்கு ஆவணங்களை அழிக்க சதி..? பகீர் சிசிடிவி காட்சிகள்…!!!
Author: Babu Lakshmanan13 May 2024, 7:46 pm
தமிழ்நாடு போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வரும் நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக பத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் காவல் நிலையம் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் காவல் நிலையத்தில் வாசலில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: ராமதாஸ் குறித்து அவதூறு… கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் ; பாமகவினர் பரபரப்பு புகார்..!!!
இதனால் காவல் நிலைய வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் மற்றும் காவல் நிலையத்தில் முன் பக்கம் முழுமையாக இருந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆதரத்தை அழிக்கும் நோக்கோடு, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதும் காரணமா…? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.