இளம்பெண்ணை கிண்டல் செய்த விவகாரம்… உருட்டு கட்டையால் தாக்கியதில் தடுக்க வந்தவர் பலி… கிண்டல் செய்தவர் தப்பியோட்டம்..!!

Author: Babu Lakshmanan
26 May 2022, 9:16 pm

கரூரில் பெண் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த உறவினர் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தன்னாசியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் (24), சூர்யா (20). இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விருந்துக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் சூர்யா கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது சகோதரர் சூர்யாவை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அரவிந்த் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இரவு ஒன்பது முப்பது மணி அளவில் சின்னதாராபுரம் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அரவிந்தன் மற்றும் சூர்யாவையும் உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அரவிந்தன் படுகாயம் அடைந்தார். சூர்யா காயங்களுடன் தப்பி ஓடினர்.

பின்னர், இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அரவிந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சூர்யா அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த சின்னதாராபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும்,உயிரிழந்த அரவிந்த் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட அரவிந்த் சர்ச்சைக்குரிய பெண்ணின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் பெண்ணை கிண்டல் செய்த விவகாரத்தில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 809

    0

    0