ஆடம்பர மோகம் : கள்ளக் காதலியோடு இணைந்து திட்டம் தீட்டிய வாலிபர்: கரணம் தப்பினால் மரணம்…!!

Author: Sudha
16 August 2024, 6:12 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசி,இவர் விஷ்வா என்பவருக்கு 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்து கணவர் திட்டியதால் விஷ்வாவிடம் கலையரசி நகையை திருப்பி கேட்டுள்ளார். பின்னர் கலையரசியை முடிச்சூருக்கு வரவழைத்த விஷ்வா, தனது 2வது மனைவியான வெண்ணிலாவுடன் வேலை செய்யுமாறும், சில நாட்களில் நகையை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

எனினும், தொடர்ந்து கலையரசி நகையை கேட்டு வந்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டார் விஷ்வா. ஒருகட்டத்தில், வெண்ணிலாவுடன் கலையரசியை வெளியே அழைத்து சென்ற விஷ்வா, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கூலிப்படையை சேர்ந்த 2 பேரை ஏவி இரும்புராடால் கலையரசியை அடித்துக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அவர்களிடம் இருந்து தப்பிய கலையரசி எட்டியாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சமடைந்தார். இந்த சம்பவத்தில் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் ஏற்கனவே கைதான நிலையில், தலைமறைவாக இருந்த விஷ்வா, வெண்ணிலாவை போலீசார் கைது செய்தனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 834

    0

    0