மனைவிக்கு தகாத உறவு…? விரக்தியில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்.. நலம் விசாரிக்க வந்த நர்சுக்கு நேர்ந்த கதி!!

Author: Babu Lakshmanan
3 May 2023, 4:44 pm

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியரை கத்தியால் தலையில் கணவர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவருடைய மனைவி பரணி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பரணி முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.

மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளதாக சந்தேகம் கொண்ட சரத்குமார் , அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று இரவும் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் சண்டை வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை பரணி வழக்கம்போல பணிக்கு வந்துவிட்ட நிலையில், வீட்டில் இருந்த சரத்குமார் பிளிச்சிங் பவுடர் மற்று பினாயில் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் சரத்குமாரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிச்சைக்காக தேர்த்துள்ளனர்.

அப்போது அங்கு பணி செய்பவர்களிடம் மனைவியை பார்க்க வேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார். முதலில் மறுத்த பரணி பிறகு சென்று சரத்குமாரை பார்த்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது திடீர் தான் மறைத்து வைத்திருந்த நெல் அறுக்கும் அருவாளை எடுத்து பரணி தலை மற்றும் கழுத்தில் வெட்டியுள்ளார்.

மேலும் உடம்பு , கை பகுதியிலும் அறுத்துள்ளார். இதில் கழுத்தில் காயமடைந்த பரணியை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் கிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் பரணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அறிந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் சரத்குமாரை கைது செய்து மீண்டும் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் மனைவியின் கழுத்தை கணவர் அறுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 601

    0

    0