மஞ்சும்மல் பாய்ஸ் பட மோகம்.. டால்பின் நோஸ் பகுதியில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரால் பரபரப்பு!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியில் டால்பின் நோஸ் என்னும் சுற்றுலா தளம் உள்ளது. இந்த நிலையில் தற்போது தொடர் விடுமுறை காரணமாக இங்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று நண்பகல் வேளையில் தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர்கள் நேற்று சுற்றுலா வந்த நிலையில் இன்று வட்டாகானல் பகுதியில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது இங்குள்ள ஆபத்தான பாறையின் அருகே செல்ஃபி எடுக்க சென்ற இளைஞர் கால் தவறி சுமார் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். அதன் பிறகு உடன் வந்தவர்கள் அவரை மீட்டு மேல் பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். அதனை தொடர்ந்து கொடைக்கானல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க பட்டது .
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் வட்டக்கானலுக்கு கொண்டுவரப்பட்டு அதன் பின் ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சுற்றுலா வரும் இளைஞர்கள் இது போல ஆபத்தான பகுதிக்கு சென்று தவறி விழுவது தொடர்கதையாக உள்ளது.
எனவே இந்த சுற்றுலப்தளத்தில் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்து சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.