மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடியேற்றம் : ஆளுநர் தமிழிசை, தமிழக அமைச்சர், எம்பி உட்பட பலர் பங்கேற்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan27 February 2022, 10:43 am
கன்னியாகுமரி : பிரசத்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெலுங்கானா, புதுச்சேரி அளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் பங்கேற்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசத்தி பெற்ற கோயில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.
பெண்கள் தலையில் இருமுடி கட்டை சுமந்து வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் வருடா வருடம் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த வருட மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது கொடியை கோயில் தந்திரி மகாதேவர் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி விஜய் வசந்த், எம்.பி. விஜயகுமார், மாவட்ட ஆட்சி தலைவர் அரவிந்த், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் உஷ பூஜை, உச்சகால பூஜை, சாயரஷ்ய பூஜை, அத்தாள பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுதல், தங்க தேர் வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். 10-வது நாள் இரவு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடைகிறது
திரு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருவிழாவின் இறுதி நாளான மார்ச் 8 கொடை அன்று மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0
0