மாண்டஸ் புயலால் பலத்த சேதம்.. அறுந்து விழுந்த மின் வயரை மிதித்த பெண் உள்பட 2 பேர் உயிரிழந்த அதிர்ச்சி

Author: Babu Lakshmanan
10 December 2022, 9:42 am

சென்னை : மாண்டஸ் புயல் காரணமாக சாலையில் அறுந்து விழுந்த மின் வயரை மிதித்த பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றினால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, ஆவின் பால் தடையின்றி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சுமார் 75 கி.மீ வேக புயல் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மரங்கள், மின்கம்பங்கள், சிக்னல்கள் விழுந்த நிலையில் மடிப்பாக்கத்தில் பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மடிப்பாக்கம் ராம்நகர் பகுதி 7வது தெரு பகுதியில் லட்சுமி (45), என்பவரும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25) என்பவரும் உயிரிழந்துள்ளனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…