புயல் கரையை கடந்தும் ஓயாத சூறைக்காற்று… படகுகள் மோதி சேதம்.. மீன்பிடி வலைகள் நாசம்.. வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மீனவர்கள்!!

Author: Babu Lakshmanan
10 December 2022, 11:42 am

திருவள்ளூர் ; மாண்டஸ் புயல் கடந்த போது வீசிய பலத்த காற்று மழையில் பழவேற்காடு பகுதியில் மீன்பிடி படகுகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்ட போதிலும், 20க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று உரசி சேதமாகின.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் கடந்த போது வீசிய பலத்த காற்று மற்றும் மழையில் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடி படகுகளை பத்திரமாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தி, கயிறுகளில் கட்டி வைத்தபோதிலும், 20க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று உரசி சேதம் ஆகின.

மேலும், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் மாண்டஸ் புயல் கரையை நள்ளிரவு கடந்த போதும், பழவேற்காடு பகுதியில் கடலோரத்தில் வீசிய பலத்த சூறைக்காற்று மற்றும் மழையால், மீன்பிடி வலைகள் மண்ணோடு மண்ணாக மணலில் புதைந்தன. மீன்பிடி வலைகள் வீசப்பட்டு காணாமல் போயின.

புயல் கரையை கடந்தும் தொடர்ந்து கடற்கரையில் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 453

    0

    0