அஜித்-க்கு ஜோடியாகும் அசுரன் பட நடிகை.? வெளியான தகவல்..!

Author: Rajesh
5 May 2022, 1:38 pm

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். இந்த படத்தினை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரங்களில் அவரே கதாநாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தனுஷ் உடன் ‘அசுரன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். தற்போது அஜித் படத்தில் நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி