மஞ்சும்மல் பாய்ஸ் பட மோகம்.. மருதமலையில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் அத்துமீறல்.. ஷாக் VIDEO!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2024, 11:18 am
Maruthamalai
Quick Share

கோவை மருதமலை வனப் பகுதியில் அத்துமீறி சென்று செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள் செல்ஃபி, ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலம் அடைவதற்கு மருதமலை அருகே உள்ள வனப் பகுதியில் அமைந்து உள்ள மலை மீது ஆபத்தான முறையில் ஏறி உயிரை பணயம் வைக்கும் இளைஞர்கள் மொபைல் போன்களில் செல்ஃபி எடுத்தால் youtube, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலம் அடைவதற்கும், வருமானம் ஈட்டவும் பல விதங்களில் வீடியோக்களை எடுத்து சிலர் வெளியிட்டு வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது அதிகாரிகள் கவனத்திற்குச் சென்று அதற்கு ஏற்ப அபராதம் விதித்தால் மன்னிப்பு கடிதங்களை எழுதி கொடுத்து விட்டு இது போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் படிக்க: டெல்லிக்கு செல்ல முதலமைச்சர் முடிவு… பின்வாங்கிய மம்தா : இண்டியா கூட்டணியில் இடியாப்ப சிக்கல்!!!

சமீபத்தில் திருச்சியில் ரயில் நிலையத்தில் இளம் பெண் இருவர் நடனம் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்கள் வைரலானது.

இது குறித்து அதிகாரி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின் இளம்பெண்களை அழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்திலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ரீல்ஸ், செல்ஃபி போன்ற வீடியோக்கள் எடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்கின்றது.

மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் அருகே வனப் பகுதிக்குள் உள்ள மலை மீது ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து செல்ஃபி, ரீல்ஸ் வீடியோக்களை இளைஞர்கள் எடுத்து வரும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து உள்ளது.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் எச்சரிக்கை விடுத்தாலும் இளைஞர்கள் கண்டு கொள்வதில்லை மருதமலை அடிவாரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

மருதமலை படிக்கட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால் பக்தர்கள் செல்ல சில நாட்கள் தடை விதிக்கப்பட்டது. வனத் துறை தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு உள்ளனர்.

பாரதியார் பல்கலைக் கழக காவலாளி சமீபத்தில் யானை தாக்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் வனபகுதியில் அத்துமீறி இளைஞர்களின் செயல்கள் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 151

0

0