அழுகிப் போன நிலையில் ஆண் சடலம் : தீபாவளி விடுமுறை முடிந்து பேக்கரியை திறக்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2022, 4:20 pm

திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் உள்ள பேக்கரி முன்பு அழுகிய நிலையில் ஆண் சடலம். கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள கே.செட்டிபாளையம் பகுதியில் ஒரு பேக்கரியின் முன்புறம் ஆண் பிணம் கிடப்பதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பேக்கரியின் முன்புறமுள்ள படிகளில் பலகாரங்கள் செய்யும் இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

அழுகிய நிலையில் உடல் உறுப்புகள் சேதம் அடைந்திருந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் பெயர் சண்முகம் என்பதும் அந்த பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் அவர் இறந்து இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்பது தெரிந்தது. அவர் எங்கு வசிக்கிறார் எப்படி இறந்தார். கொலை செய்யப்பட்டாரா? அல்லது தானாகவே அந்த இடத்தில் விழுந்து இறந்தாரா? இறப்புக்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 634

    0

    0