‘ஏக் மால் தோ துக்கடா’…. கறிக்கடையில் சிக்கனை வெட்டி பிரச்சாரம் செய்த மன்சூர் அலிகான்…!!!

Author: Babu Lakshmanan
20 March 2024, 1:41 pm

அகிம்சைவாதியை இம்சைவாதியாக்குறீங்களப்பா எனக் கூறி சிக்கன் கறிக்கடையில் கறிவெட்டி பிரச்சாரம் நடிகர் மன்சூர் அலிகான் மேற்கொண்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில நாட்களாக வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான்.

இதனிடையே, குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான், அங்குள்ள ஒரு கறிக்கடையில் கறியை வெட்ட சொன்னபோது, ‘அகிம்சைவாதியான என்னை இம்சைவாதியா ஆக்குறீங்களேப்பா,’ என கலகலப்பாக பேசினார்.

பின்னர், சிக்கனை இரண்டு துண்டுகளாக வெட்டி சிக்கனை காட்டி ஏக் மால் தோ துக்கடா என நகைச்சுவையாக கூறினார்.

  • Bharatha movie Samantha cameo ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!முக்கிய ஹீரோயினுடன் கேமியோ ரோலில் நடிக்கும் சமந்தா.!