ஜெயலலிதாவை தீர்த்து கட்டியதே பாஜக தான்… ஓபிஎஸின் இந்த நிலைமைக்கு ஜெ.,வின் சாபம் தான் காரணம் ; மன்சூர் அலிகான் பகீர்!

Author: Babu Lakshmanan
28 March 2024, 1:53 pm

ஜெயலலிதா அம்மாவை குத்துயிரும், கொலை உயிருமாக ஆக்கியதற்காக ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

வேலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- ஜெயலலிதா அம்மாவை குத்துயிரும், கொலை உயிருமாக ஆக்கியதற்காக ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளார். ஓபிஎஸ் என்னை போன்று தனி சின்னத்திற்காக கெஞ்சி கொண்டிருக்கிறார். நான்தான் முதல் முதலில் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தேன்.

முதல் முதலில் அதீத வாக்கு வித்தியாசத்தில் நான்தான் வெற்றி பெறுவேன். கே.வி.குப்பம் பகுதியில் ஒரு மாட்டு ஆஸ்பத்திரி கூட இல்லை. தேர்தலில் நிற்க நோக்கமே மத்தியில் பாசிச பிசாசாக உள்ள மோடி அரசை வேர் அறுக்க வேண்டும் என்பதற்காகத்தான். முன்னாள் முதல்வரை தீர்த்து கட்டியதே அவர்கள் தான். இதை வெளிப்படையாக சொல்லி வருகிறேன். எல்லா ஆவணமும் கேஸ் போட்டு வாங்கி வைத்துள்ளேன்.

இந்த பக்கம் அதிமுக, அந்த பக்கம் பாஜக இரண்டையும் எதிர்ப்பது தான் எனது நோக்கம். அதிமுக, பாஜக மட்டுமல்ல அனைவரையும் நான் தாக்கி பேசுவேன். எனக்கும் விவசாய சின்னம் வந்தது. ஆனால் மனசாட்சி இடம் கொடுக்காததால் விவசாய சின்னத்தை டிக் பண்ண வில்லை.

டார்ச் லைட்டும் இருந்தது. மற்றவர்களுக்கு விளக்கு பிடிக்கும் வேலை எனக்கு இல்லை என்பதால் அதை நான் விட்டு விட்டேன். சீமானுக்கு சின்னம் மறுக்கப்பட்டது. மிகப்பெரிய அநியாயம் தான். நான்கு, ஐந்து லட்சம் பேருக்கு வட்டி இல்லா கடன் கொடுக்க திட்டம் வைத்துள்ளேன். திருமா, சீமான், வைகோ உள்ளிட்டோருக்கு சின்னம் மறுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு எம்பி கணேஷ் மூர்த்தி மறைவிற்கு நான் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோல் நிகழக் கூடாது எனக் கூறினார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!