வேலூர் கோட்டையில் உடற்பயிற்சி செய்து வாக்குசேகரிப்பு.. இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய மன்சூர் அலிகான்.!!
Author: Udayachandran RadhaKrishnan18 March 2024, 10:41 am
வேலூர் கோட்டையில் உடற்பயிற்சி செய்து வாக்குசேகரிப்பு.. இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய மன்சூர் அலிகான்.!!
நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் வேலூரில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பு மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை வரலாற்று புகழ்மிக்க வேலூர் கோட்டையில் நடைபயிற்சி மேற்கொண்டு பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நடை பயிற்சியின் பொழுது உடற்பயிற்சிகள் செய்து அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். மேலும் பொதுமக்கள் அவருடன் தங்களது கைபேசிகளில் செல்பிகளை எடுத்தனர்