திரிஷா குறித்து மன்சூர் பேச்சு… லியோ படக்குழு எதிர்ப்பு : வெகுண்டெழுந்த குஷ்பு!!
Author: Udayachandran RadhaKrishnan19 நவம்பர் 2023, 12:22 மணி
திரிஷா குறித்து மன்சூர் பேச்சு… லியோ படக்குழு எதிர்ப்பு : வெகுண்டெழுந்த குஷ்பு!!
கடந்த மாதம் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு தளபதி விஜய்யும், த்ரிஷாவும் இணைந்து நடித்து இருந்தனர். லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
மேலும் இந்த படத்தில் இவர்களுடன் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதிலும் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகான் குறித்து சில மேடைகளில் தொடர்ந்து பேசிவந்த சூழலில் இப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். மன்சூரும் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த படம் ரிலீஸாகி வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டிருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் கூறிவருகிறது. அதுமட்டுமின்றி படம் வெளியாகி இதுவரை 1 மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போது உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருக்கிறதாம்.
இதன் காரணமாக அண்மையில் லியோ படத்தின் சக்சஸ் மீட்டும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் “த்ரிஷாவுடன் லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது; குஷ்பூ, ரோஜாவை மெத்தையில் போட்டது போல் த்ரிஷாவை தூக்கிப்போட முடியவிக்கௌ என ஆபாசமான முறையில் பேசியிருந்தார்”
இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா “மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்துள்ளது. நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன், மேலும் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு மற்றும் மோசமான ரசனையைக நான் காண்கிறேன். அவருடன் சேர்ந்து இனி நடிக்கமாட்டேன். அவர் மனித குலத்துக்கே இழுக்கு” என காட்டமான பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்சூர் அலிகானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ் கடும் கோபமடைந்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியதால், மன்சூர் அலி கான் கூறிய பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து கோபமடைந்தோம். பெண்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு எந்தத் துறையாக இருந்தாலும் அதில் மரியாதை தரப்பட வேட்னும்.
மன்சூர் அலிகானின் அந்தப் பேச்சை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜை தொடர்ந்து தற்போது நடிகை குஷ்பூவும் கருத்து தெரிவித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு பெண்ணை அவமதிப்பது அல்லது அவளைப் பற்றி மிகவும் அவமரியாதையாகப் பேசுவது தங்களின் பிறப்புரிமை என்று சில ஆண்கள் நினைக்கிறார்கள். மன்சூர் அலிகானின் சமீபத்திய காணொளி அதற்கு ஒரு உதாரணம். அவரது பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் “சும்மா காமெடிக்கு தான் சொன்னேன்” என்ற அணுகுமுறை அவர்களின் இந்த பேச்சை கவனிக்கப்படாமல் புறக்கணிப்பட்டுவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இல்லை, அவ்வாறு கிடையாது. அவர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பெண் நடிகரிடமும், பொதுவாக பெண்களிடமும் தனது மோசமான, பெண் வெறுப்பு, கீழ்த்தரமான மனநிலையை வெளிப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இன்றைய பெண்கள் தங்கள் மரியாதை மற்றும் கண்ணியத்திற்காக போராடும் அளவுக்கு வலிமையானவர்கள்” என குறிப்பிட்டிருக்கிறார்.
0
0