என்ன நடக்குது கோவையில்… வ.ஊ.சி மைதானத்தில் குவியல் குவியலாக கிடந்த ஆணுறைகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Author: Babu Lakshmanan
24 March 2022, 10:49 am

கோவை வ.ஊ.சி. மைதானத்தில் குவியல் குவியலாக ஆணுறைகள் கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:வஊசி மைதானம் அருகில் உள்ள நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் அதன் அருகில் உள்ள மைதானத்தில் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறும். தடகள போட்டிகள் உள்விளையாட்டு அரங்கிலும் கபடி, கைபந்து, கூடைபந்து போட்டிகள் வெளியில் உள்ள மைதானத்தில் நடைபெறுவது வழக்கம்.

Nehru Stadium - For all sports lovers in Coimbatore - Destination Infinity

இங்கு ஆறு வழிகள் உள்ள நிலையில் மைதானத்தை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பி வேலிகள் உடைந்து கிடக்கும் நிலையில் பயிற்சி மைதானத்தில் உள்ளே நுழைந்து சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கழிவறை அருகே அமர்ந்து மது அருந்துவது, கஞ்சா அடிப்பது போன்ற குற்ற சம்பங்களில் ஈடுபடுகின்றனர். இரவு ஏழு மணிக்கு மேல் பயிற்சி முடித்து மக்கள் நடமாட்டம் குறையும் நிலையில் இந்த இடம் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

தினமும் மாலை நேரத்தில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இங்கு பயிற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் கூடைபந்து மைதானத்தில் ஏராளமான ஆணுறைகள் ஏராளமாக கிடப்பது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து கூடைபந்து கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் கூறுகையில், “சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே ஒரு காவலாளியை மட்டுமே பணியில் இருக்கிறார்,” என தெரிவித்தார்.

மேலும் இங்கு அனைத்து இடங்களிலும் CCTV கேமராக்கள் பொருத்தபட வேண்டும் எனவும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்தை அதிகபடுத்த வேண்டும் என்றவர், அனைத்து கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பாதுகாப்பு பணிக்கு காவலாளிகளை அதிகபடுத்துவதே தீர்வாக அமையும், என்றார்.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 1342

    0

    0