அரை நூற்றாண்டு திராவிட ஆட்சி.. தொடரும் ஆணவக் கொலைகள்.. கூட்டணி கட்சித் தலைவரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

Author: Hariharasudhan
24 December 2024, 5:48 pm

இந்தியாவிலேயே ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது என மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை: பெரியாரின் நினைவுநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார்.

அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன், “பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டில் ஆட்சி செலுத்தி வருகின்றது. ஆனாலும் கூட இந்தியாவிலேயே ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தலித் மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் இழைக்கப்படுகிறது.

சாதிய உணர்வுகளும், சாதிய அணிசேர்க்கையும் கொடிகட்டிப் பறக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த அரைநூற்றாண்டு கால ஆட்சியில் பெரியாரியக் கொள்கைகள் படிப்படியாக கைவிடப்பட்டு உள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

K Balakrishnan on Honour Killing in TN

பெரியார் நினைவுநாளில், அவர் தூக்கிப் பிடித்த சமூக ஒற்றுமை, சாதிகள் அற்ற சமூகம் வேண்டும். பெரியாரின் திசை வழியில் பயணிக்க வேண்டும் என அனைவரையும் அழைக்கிறோம். பெரியாரின் கொள்கைகளை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனைவி ஊரில் வாழ்ந்த கணவர்.. தட்டிக்கேட்க வந்த உறவினர்கள்.. பாய்ந்த கத்தி.. சிவகாசியில் அதிர்ச்சி!

மேலும், ஆளும் திமுக உடன் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இவ்வாறு பேசி இருப்பது கூட்டணியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் போது காங்கிரஸும், ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் விசிகவும், திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை மறைமுகமாக எடுத்ததாக விமர்சனங்கள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun controversy Pushpa 2 அல்லு அர்ஜுன் 20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் …அமைச்சரின் பேட்டியால் பரபரப்பில் தெலுங்கானா..!
  • Views: - 28

    0

    0

    Leave a Reply