அறிவியலில் இன்று முக்கியமான தினம் ; ஆண்டுக்கு 2 முறை மட்டுமே நடக்கும் அதிசயம் ; ஏன்…? எப்படி தெரியுமா..?

Author: Babu Lakshmanan
21 March 2023, 1:40 pm

இன்று சம இரவு நாள் இரவும் பகலும் சரிசமமாக இருப்பது சம இரவு நாளாக பார்க்கப்படுகிறது. அறிவியலில் இது முக்கிய தினமாக பார்க்கப்படுகிறது.

வானில் இருக்கக்கூடிய சூரியன் சந்திரன் மற்றும் பூமியில் அதிக அளவில் அறிவியல் மாற்றங்கள் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இன்று மார்ச் 21ஆம் தேதி சம இரவு நாளாக பார்க்கப்படுகிறது. அறிவியல் நாளில் முக்கிய தினமாக பார்க்கப்படக்கூடிய இந்நாளில் இரவும் பகலும் சரிசமமாக இருக்கும்.

12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவாக இருக்கிறது. வருடத்தில் இரண்டு முறை இந்த சம இரவு நாள் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமி மைனஸ் 23 டிகிரியில் வரும் பொழுது இந்த சம இரவு நாள் வருகிறது. அறிவியல் முக்கிய தினமாக இருக்கக்கூடிய இந்த நாளில் கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 400 மாணவர்கள் மேல் பதிவு செய்யப்பட்டு இன்று விஞ்ஞானிகள் அவர்களுக்கு சம இரவு நாள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 372

    0

    0