வெண்கலம் வென்ற தங்கமகன்.. சொந்த ஊரில் உற்சாகமாக கொண்டாடிய கிராம மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2024, 11:13 am

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள பெரிய வடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். மாற்றுத்திறனாளி ஆன இவர் இந்தியா சார்பில் தொடர்ந்து மூன்று முறை பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடிய மாரியப்பனுக்கு இந்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது பத்மபூஷன் விருதுகளும், தமிழக அரசின் சார்பில் காகித நிறுவனத்தில் துணை மேலாளர் பதவியும் வழங்கி கௌரவிக்கப்பட்டு இருந்தனர்.

2016,2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை குவித்த அவர் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் வெற்றிவாகை சூடினார்.

அவரின் வெற்றியை ஊர் பொதுமக்கள் குடும்பத்தினர் மாரியப்பனின் ஆசிரியர்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!