கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பகுதியில் வசிப்பவர் சதாசிவம். ஆவின்பால் முகவரான இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் தனது பணிகளுக்காக வெளியே சென்றுள்ளார்.
அவரது மனைவி மற்றும் மகன்களும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால் கடைசியாக வீட்டில் இருந்து வெளியே சென்ற சதாசிவத்தின் மகன் வீட்டை பூட்டி வழக்கம்போல் வீட்டின் முன்புள்ள பெட்டியில் சாவியை வைத்துவிட்டு அவரும் வேலைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் சதாசிவம் மாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்தவர் ஆவின் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு வைத்திருந்த ரூ 5 ஆயிரம் பணத்தை எடுக்க பீரோவை திறந்துள்ளார்.
அப்போது அவர் வைத்த இடத்தில் பணம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டுள்ளார். யாரும் எடுக்கவில்லை என்றதும், பீரோவை சோதித்து பார்த்ததில் லாக்கரில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்ததையடுத்து கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
சதாசிவத்தின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளார்கள். அதில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிற்க்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து தனிதனியே விசாரித்ததில் இருவரும் முன்னுக்குபின் முரனான தகவல் அளித்துள்ளனர்.
மேலும் போலிசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் ஒருவர் பெயர் ரமணி, மற்றொருவர் வினையா என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது கரூர், காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
போலிசாரின் விசாரணையில் சதாசிவத்தின் வீட்டில் நகையை கொள்ளையடித்ததும், கொள்ளையடிப்பதற்க்காக தனியார் கால்டாக்ஸி மூலம் கோவை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சதாசிவத்தின் வீட்டில் ரமணி நகையை திருடியதும். திருடிய நகைகளை வினயா, ரமணி இருவரும் சரிபாதியாக பிரித்து எடுத்துள்ளனர். இதில் வினயா 14 கிராம் நகையை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல நடைகடையில் தனது அடையாள அட்டையை காண்பித்து விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நகைகடைகாரர்களிடம் விற்கப்பட்ட 14 கிராம் நகை உட்பட சதாசிவம் வீட்டில் திருட்டுபோன 15 சவரன் தங்க நகைகளையும் கைப்பற்றிய சிங்கநல்லூர் போலீசார் இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.