101 வயதில் திருமணம்… தம்பதியை வாழ்த்திய 4 தலைமுறைகள் : நெகிழ வைத்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2023, 4:04 pm

விழுப்புரம் மாவட்டம் தென்னவராயன் பேட்டை கிராமத்தை அருளோக செட்டியார் மற்றும் சகுந்தலா தம்பதியினருக்கு 8 பிள்ளைகள் 12 பேரக்குழந்தைகள் பத்துக்கும் மேற்பட்ட கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளன.

நான்கு தலைமுயையை பார்த்துள்ள இந்த தம்பதியிருக்கு திருமணம் நடைபெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் நூறு வயதினை 101 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள வயதான முதியவர் அருளோகத்திற்கு 100 வயதினை கடந்ததால் தனது துணைவியாருடன் திருமணம் செய்ய பிள்ளைகள் பேரக்குழந்தைகள் முடிவெடுத்து இன்று விழுப்புரம் காமராஜர் வீதியிலுள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

101 வது வயதில் மீண்டும் திருமணம் செய்ய வேண்டுமென பிள்ளைகள் முடிவெடுத்து நடைபெற்ற திருமணத்தில் வயதான தம்பதியினர் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி கொண்டு பிள்ளைகளுக்கு ஆசி வழங்கினர்.

இதில் உறவினர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு தம்பதியினரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுகொண்டனர்.

விழுப்புரத்திலையே முதல் முறையாக 101 வது வயதில் இளம் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது என்பது அனைவரின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 416

    0

    0