இதுக்கு முன்னால 5 பேரு.. ஆனா 3 புருஷன் தான்.. கரூர் கல்யாண ராணி சிக்கியது எப்படி?

Author: Hariharasudhan
27 December 2024, 2:41 pm

கரூரில், 3வது திருமணம் செய்த நபரால் கல்யாண ராணி ரேணுகா எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது குறித்து பார்க்கலாம்.

கரூர்: கரூர் மாவட்டம், புஞ்சைக்காளக்குறிச்சி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவருக்கும், கோவை மாவட்டம், ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா (36) என்பவருக்கும், கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், ரேணுகாவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த மெய்யர் மற்றும் கோவையைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன் திருமணம் நடந்திருப்பது ரமேஷுக்கு, அவரது செல்போன் அழைப்பு மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, இது குறித்து ரேணுகாவிடம் ரமேஷ் கேட்டுள்ளார்.

அப்போது ரேணுகா, நான் உன்னை விட்டுச் செல்ல வேண்டுமானால் 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகை கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து, இது குறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த ரேணுகா, தப்பிச் செல்வதற்காக கரூர் பேரூந்து நிலையம் வந்துள்ளார்.

Karur Kalyana Rani arrested

இந்த தகவல் அறிந்ததும் கரூர் அனைத்து மகளிர் போலீசார், பேருந்து நிலையத்துக்கு விரைந்து சென்று ரேணுகாவைக் கைது செய்து விசாரித்து உள்ளனர். அப்போது, ரேணுகாவின் முதல் கணவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ரமேஷின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த கோவையை சேர்ந்த தரகர்களான ஜெகநாதன், ரோஷினி மற்றும் பழனிக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகர் சிவராஜ்குமார் எப்படி இருக்கிறார்…அமெரிக்காவில் இருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

மேலும், இந்த இரு கணவர்களுக்கு இடையே 3 பேருடன் ரேணுகா உறவில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கணவர் 3 பேரை தவிர்த்து வேறு யாருடனும் ரேணுகாவுக்கு திருமணம் நடந்ததா, வரன் தேடும் இளைஞர்களைக் குறி வைத்து ஏமாற்றி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 58

    0

    0

    Leave a Reply