வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்.. சைகையில் அன்பு பரிமாறிய நெகிழ்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan26 April 2024, 2:33 pm
வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்.. சைகை மொழியில் அன்பு பரிமாறிய நெகிழ்ச்சி!
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெரியக்கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவர், பிறவியிலேயே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவருக்குத் திருமணத்துக்காக பெண் கிடைக்காமல் பெற்றோரும், உற்றாரும், ஊர் மக்களும் பல ஆண்டுகளாக பெண் தேடும் வேளையில் இறங்கி இருந்தனர்.
இந்த நிலையில், மகாத்மா காந்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சுயம்வரம் நிகழ்ச்சி மூலம், மகாலட்சுமியின் குடும்பத்தினரின் அறிமுகம் கிடைத்தது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கரடிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமியும் பிறவியிலேயே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
சைகை மொழியில் அன்பு பரிமாறிய புதுமணத் தம்பதி!#viralpost #viralvideo #viralreels #viralshorts #shortsviral #trendingvideos #viralnews #viral #video #deafanddumb #kallakurichi #Temple #marriage #couples #handicap #tamilnadugovernment pic.twitter.com/8baGz5lTeq
— UpdateNews360 (@updatenews360) April 26, 2024
சுயம்வரம் நிகழ்ச்சியில் நாராயணனுக்கும், மகாலட்சுமிக்கும் திருமண பந்தம் உறுதி செய்யப்பட்டு, பின்னர் நிச்சயதார்த்தமும் நடந்தது. இதனைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் அருகே மேலத்தாழனூரில் உள்ள குலதெய்வமான பச்சையம்மன் கோயிலில், இருவீட்டார் முன்னிலையில் இன்று நாராயணனுக்கும், மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்தது.
மேலும் படிக்க: பாஜக வேட்பாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம்.. ₹4.8 கோடி பறிமுதல் ; மறுபடியும் முதல்ல இருந்தா?
இதையடுத்து, திருமணம் முடிந்து மணமக்கள் கோயிலை சுற்றி வலம் வந்தபோது, வாய்பேச முடியாத நாராயணனும், மகாலட்சுமியும் சைகை மொழியில் அன்பாக பேசிக்கொண்டது, இரு வீட்டாரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. மேலும், அங்கிருந்த மக்களும் மணமக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.