அடுத்த மாதம் திருமணம்.. ஆசையாக காத்திருந்த புதுமாப்பிள்ளை : நல்ல பாம்பு கடித்ததால் நேர்ந்த சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2022, 9:52 pm

திருவாரூர் : குடவாசல் அருகே அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்த நீலமேகம் என்பவரது மகன் மோகன்ராஜ் (வயது 26). இவர் தனியார் நெட்வொர்க் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம்  மோகன்ராஜ் தனது வீட்டின் அருகில் உள்ள கீற்றுக் கொட்டகையில் தனது நண்பர்கள் சிலருக்கு சிம் விற்பனை செய்வதற்காக காத்துக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அங்கு இருந்த பெரிய நல்ல பாம்பு ஒன்று அவரை தீண்டியது.

இதனை அடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து தற்போது மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோகன்ராஜ்க்கு திருமணம் நிச்சயமாகி அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் நல்ல பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் என்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து குடவாசல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1317

    1

    0