லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை : முக்கிய ஆவணங்கள் சிக்கியதா.?
Author: Udayachandran RadhaKrishnan11 May 2023, 6:49 pm
பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் உள்ள மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 11 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனை வெள்ளகிணறு பிரிவு பகுதியில் உள்ள அவரது வீடு ஆகியவற்றிலும் தனித்தனியே அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் சோதனையுடன் இந்த மூன்று இடங்களிலும் சோதனை நடைபெற்று வரும் நிலையில் வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெளி ஆட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கேரள மாநிலத்தை சேர்ந்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.