பொசுங்கிய பொருட்காட்சி… கோடிக்கணக்கான ரூபாய் சாம்பல் : சிலிண்டர்கள் சிதறுவதால் மக்கள் அச்சம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2025, 5:06 pm

ஆந்திரா விஜயவாடாவில் உள்ள சித்தாரா பொருட்காட்சி மைதானத்தில் ஜலகண்யா எக்ஸிபிஷன் என்ற பெயரில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மதியம் திடீரென்று அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து பெரும் தீ விபத்தாக மாறி பொருட்காட்சி மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டன.

இதையும் படியுங்க: கழுத்தில் தாலியுடன் வகுப்புக்கு வந்த 8ஆம் வகுப்பு மாணவி.. பகீர் பின்னணி!

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படையின தீயை கட்டுப்படுத்தி அணைக்க போராடி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பார்வையாளர்களுக்கு உணவு சமைப்பதற்காக ஹோட்டல் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறுகின்றன.

Fire in Exhibition

எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக சித்தாரா பொருட்காட்சி மைதானம் பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

Massive Fire in Vijayawada Exhibition

தீ விபத்து காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

  • ஆண்டியால் பறிபோன வாய்ப்பு..நடிகர் கரண் வீழ்ந்தது எப்படி…பிரபலம் சொன்ன அந்த தகவல்.!
  • Leave a Reply