சாலையின் குறுக்கே மறுக்கே ஓடிய சிறுத்தை… அதிர்ந்து போன மக்கள்…களத்தில் இறங்கிய வனத்துறையினர்..!!!

Author: Babu Lakshmanan
3 April 2024, 10:23 am

மயிலாடுதுறையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாடியதை பார்த்ததாக சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர், கால் தரத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பின்னர், சிசிடிவி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றது தெரியவந்தது.

மேலும் படிக்க: மத்திய அரசால் வள்ளி கும்மி கலைக்கு உரிய அங்கீகாரம்… கோவையில் கும்மி ஆடி வாக்குசேகரித்த அண்ணாமலை வாக்குறுதி..!!

நேற்று நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீர்காழி வன சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் சிறுத்தையை தேடி வருகின்றனர். தேடி வருகின்றனர். நேற்று இரவு சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று இறந்து கிடப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுத்தையை யாராவது கண்டால் 9360889724 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Gold and Silver rate ; புதிய உச்சத்தில் தங்கம் விலை… ரூ.52 ஆயிரத்தை எட்டி விற்பனை ; அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!!

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூரைநாடு பகுதியில் செயல்படும் பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை அறிவித்துள்ளார்.

வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டு விடும் என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை‌ என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 367

    0

    0