பட்டாசு ஆலையில் திடீரென வெடித்து சிதறிய பட்டாசுகள்… 4 பேர் உடல் சிதறி பலி ; தீபாவளி நெருங்கி வரும் சூழலில் தொடரும் சோகம்..!!

Author: Babu Lakshmanan
4 October 2023, 6:18 pm

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நாட்டு வெடிகள் தயாரிப்பின் போது வெடி விபத்து நான்கு பேர் சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே தில்லையாடி காளியம்மன் கோயில் தெருவில் அப்பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் உள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

தயாரிப்பின் போது திடீரென்று தீப்பற்றியதால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த வெடிகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் தொழிலாளர்கள் நான்கு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். உடலின் பாகங்களை அடையாளம் காண முடியாதபடி பல்வேறு இடங்களில் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு உடல் பாகங்கள் சிதறியுள்ளன.

இதன் காரணமாக அப்பகுதியில் அருகில் இருந்த வீடுகள் குலுங்கின. புகைமூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து வேறு யாராவது இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என்பது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது. பொறையார் போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu