சீவல் கம்பெனியில் திடீர் தீவிபத்து.. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ; போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
10 August 2022, 11:29 am

மயிலாடுதுறையில் சீவல் கம்பெனியில் திடீர் தீ விபத்து குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் தெற்குகரையில் கந்தன், பாண்டிதுரை ஆகியோர் மேற்கூரை சீட்டால் அமைக்கப்பட்ட வாடகை கட்டிடத்தில் சீவல் கம்பெனி வைத்து நடத்தி வருகின்றனர்.

நேற்று மதியம் திடீரென்று சீவல் கம்பெனியில் தீபிடித்து எரியத்தொடங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர். இதில் 3 லட்சம் மதிப்பிலான சீவல் பாக்கெட்டுக்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பளானது.

இந்த திடீர் தீவிபத்திற்கு மின்கசிவுகாரணமா அல்லது மர்ம நபர்கள் தீவைத்தனரா என்ற கோணத்தில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!