ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் கைவரிசை.. சிக்கிய MBA பட்டதாரி.. நடந்தது என்ன?

Author: Hariharasudhan
13 December 2024, 3:10 pm

சென்னையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நகைகளை திருடிய எம்பிஏ பட்டதாரியை கைது செய்த போலீசார், மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

சென்னை: சென்னை அடையார் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவரது மகன் ஆனந்த முரளியின் மகளுக்கு, நீலாங்கரை வெட்டுவாங்கேணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திருமணம் நடைபெற்று உள்ளது.

இதற்காக, டிசம்பர் 4ஆம் தேதி அன்று காலை மணமேடைக்குச் செல்வதற்கு முன்பு, மணமகளுக்கான தங்க, வைர அணிகலன்களை அணிவதற்காக, மண்டபத்தில் இருந்த அறைக்குச் சென்றுளார். அப்போது, அங்கு இருந்த இரண்டு வைர நெக்லஸ்கள், வைரத் தோடுகள் மற்றும் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது.

Gold Jewel theft in Retired IAS officer event in Chennai

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து ஆனந்த முரளி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் திருமண மண்டபத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், திருமணத்திற்கு வருவது போன்றே நல்லவிதமாக ஆடை அணிந்து வந்த 2 பேர், அறைக்குள் புகுந்து நகையை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: இந்துக்கள் மீது தீராத வன்மம்.. திமுக அரசு மீது வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!

இதனையடுத்து, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள், இருசக்கர வாகன பதிவெண் மற்றும் செல்போன் சிக்னல் ஆகியவற்றை வைத்து கொள்ளையர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், ராம்ஜி நகருக்குச் சென்ற நீலாங்கரை தனிப்படை போலீசார், அங்கு பதுங்கி இருந்த சுதர்சன் (31) என்பவரை கைது செய்தனர்.

Gold theft in Retired IAS officer event in Chennai and a MBA graduate arrested by Neelangarai Police

ஆனால், மற்றொரு நபரான கார்த்திக் (23), போலீசாரைக் கண்டதும் தப்பியோடிய நிலையில், அவத்ரை தீவிரமாக தேடி வருகின்றனர். பின்னர் சுதர்சனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் எம்பிஏ பட்டதாரி என்பதும், பத்தாண்டுகளுக்கு மேலாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இவர் கிழக்கு கடற்கரை சாலையில் தங்கி, அங்கு உள்ள ரிசார்ட்கள், திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள் ஆகியவற்றை நோட்டமிட்டு கைவரிசை காட்டியதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, சுதர்சனிடம் இருந்து 10.5 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் திருடப்பட்ட மொத்த நகைகளின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் ஆகும்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 55

    0

    0

    Leave a Reply