உதயசூரியன் சின்னத்தில் வென்ற மதிமுக எம்.பி.. திடீர் தற்கொலை முயற்சி : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2024, 7:59 pm

உதயசூரியன் சின்னத்தில் வென்ற மதிமுக எம்.பி.. திடீர் தற்கொலை முயற்சி : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., எடுத்துக் கொண்டது. இதனால் கணேசமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று( மார்ச் 24) அவரது வீட்டில் தென்னைக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடல்நலன் பாதிக்கப்பட்ட அவர், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…