திமுக கூட்டணியில் நைசாக சைடு வாங்குகிறதா மதிமுக? பரபரப்புக்கும் கட்டளைகள்!
Author: Hariharasudhan3 February 2025, 2:41 pm
மதிமுக, கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பயிற்சி பாசறை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் ஆளும் திமுக உடன் கூட்டணியில் உள்ளது மதிமுக. வைகோவால் உருவாக்கப்பட்ட இக்கட்சி, அவரது மகனான துரை வைகோ, திருச்சி எம்பியாக உள்ளார். ஆனால், தமிழக அரசியலில் ஆளும் அரசுகளுக்கு எதிராக ஓங்காரமிட்ட கட்சியாக மதிமுக இருந்தது.
பின்னர், திமுகவில் இருந்து பிரிந்து, தனிக்கட்சி தொடங்கி, தற்போதும் திமுகவுடன் தொடர்கிறது. இருப்பினும், தனிக்கட்சியாக மக்கள் மத்தியில் நிலைநிறுத்த அனைத்துக் கட்சிகளைப் போன்று மதிமுகவும் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் கள நிலவரங்கள் தெரிவிக்கிறது.
இது குறித்து, தனியார் நாளிதழிடம் பேசிய மதிமுகவினர், “மதிமுகவில் அமைப்பு ரீதியாக புதுச்சேரி, காரைக்காலையும் சேர்த்து மொத்தம் 69 மாவட்டங்கள் உள்ளன. இவற்றை பேரூர், ஒன்றியம் மற்றும் கிளை என்ற அளவில் வலுப்படுத்துமாறு தலைமை உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக வென்ற தொகுதிகளில் கட்சியை மேலும் வலுவாக வைத்திருக்கவும் தலைமை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அந்த வகையில், முதல்கட்டமாக விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: அண்ணா கூறியது உண்மைதான் போல.. அடித்துக்கூறும் ஜெயக்குமார்!
இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் தொடர்பான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, நாளை முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை வேலூர், செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மேலும், பொதுக்குழு, மாநாடு போன்றவையும் நடைபெற உள்ளது. அதுமட்டுமல்லாமல், மார்ச் மாதம் முதல் மண்டல அளவில் சார்பு அணிகளுக்கான பயிற்சி பாசறையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.