இது பைத்தியகாரத்தனமான பேச்சு… ஆளுநரின் பருப்பு தமிழகத்தில் வேகாது.. வைகோ ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
1 July 2023, 6:56 pm

தமிழ்நாட்டில் கவர்னரின் பருப்பு வேகாது என்று திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெறும் உள்ள நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது ;- இந்திய திருநாட்டில் யாரும் செய்ய முயலாத தகடு தத்து வேலைகளை தமிழ்நாட்டு ஆளுநர் செய்து வருகிறார். அவருக்கு அதிகாரம் கிடையாது. அமைச்சர்கள் நீக்குவது, மாற்றுவதும் முதலமைச்சர் தான் அதிகாரம் உண்டு என அரசியல் சட்டம் தெளிவாக கூறுகிறது. ஆனால், இவர் டிஸ்மிஸ் செய்ததாக ஆறு மணிக்கு செய்தி கொடுக்கிறார். நடுராத்திரி ஞான உதயம் வருகிறது. அதனை நிறுத்தி வைக்க சொல்லுகிறார். அதை திருப்பிக் வாங்கிக் கொள்கிறார். இந்த கோமாளித்தனமான வேலையை எந்த கவர்னரும் செய்ததில்லை.

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் மேகதாட்டு அணையை கட்ட வேண்டுமென கர்நாடக முனைகிறது. அது கட்டப்பட்டால் 5 மாவட்டங்கள் உடைய பாசனங்கள் அடியோடு பாழாக்கப்படும். குடிநீருக்கும் பிரச்சனை ஏற்படும். பெண்ணையாற்றில் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடகா முனைந்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தியதாக சிவக்குமார் கூறியிருக்கிறார். அதுவும் தமிழ்நாட்டை மிகவும் பாதிக்கும் இப்பிரச்சனை தமிழகத்தை பாதிக்க கூடியது. இதில் ஒன்றிய அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெந்தையையும் வைக்கிற போக்கை மாற்ற வேண்டும்.

அதனாலதான் குடியரசு தலைவருக்கு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என கையொப்ப இயக்கத்தை நடத்தி வருகிறோம். அதற்கு எல்லா இடங்களிலும் கட்சி சார்பற்ற ஆர்வத்தோடு, கையொப்பமிட்டு வருகின்றனர். மத்திய அரசு இதற்குப் பிறகு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்ற செய்தி தமிழக மக்களுக்கு சென்றடைகிறது இதுவே வெற்றி தானே.

ஆளுநரின் போக்கு, அவரது நடை உடை பாவனைகள் நடந்து செல்கிற போக்கு, பிரிட்டிஷ்காரர் கவர்னர் போல அவர் நடந்து கொள்கிறார். ஜனநாயக படுகொலையை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் தமிழ்நாட்டில் அவர் பருப்பு வேகாது, எனக் கூறினார்.

சனாதானம் தமிழகத்தில் தோன்றியது பத்தாயிரம் வருடம் ஆள்கிறது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- சனாதனம் என்பதே கிடையாது. சனாதானம் நாடு என்று சொன்னால் இந்தியாவே கிடையாது. இந்தியா என்ற நாடே கிடையாது. வெள்ளைக்காரன் வந்த பிறகு ஒன்றாக்கி ஒரு நாடே உருவாக்கி அதற்கு இந்தியா என்று பெயர் வைத்தார். அதற்கு முன்பு சனாதன தர்மம் என்று சனாதனம் நாடு உண்டு என்று சொன்னால் அது பைத்தியக்காரத்தனம், எனக் கூறினார்.

நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருக்கிறோம் வேறு கேள்விக்கு இடமே இல்லை. கர்நாடகாவின் போக்கு தமிழகத்தில் கூட்டணியில் பிரச்சனை ஏற்படுமா என்ற கேள்விக்கு, அப்படி பார்த்தால் இந்தியா முழுவதும்எந்த மாநிலத்தில் ஒன்றாக இருக்க முடியாது. கர்நாடகாவில் போக்கு தமிழகத்திற்கு நேர்முகமாக இருக்கிறது என்பதை தமிழகத்திற்கு கொண்டு போய் சேர்க்கிறோம். இந்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், என தெரிவித்தார்.

முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் கட்சியினர் அவருக்கு பொன்னாடை போற்றி வரவேற்பு அளித்தனர்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!