உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக மறுப்பு? திமுகவை எதிர்த்து நிற்கும் துரை வைகோ?!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2023, 7:16 pm

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக மறுப்பு? திமுகவை எதிர்த்து நிற்கும் துரை வைகோ?!!

பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மதிமுக கட்சியின் தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகின்றார்.

இந்த செயல் ஜனநாயக மற்றும் தமிழக மக்களுக்கு விரோதமானது.மேலும் நேற்று சட்டசபையில் அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் வெளிநடப்பு செய்தது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் எத்தனை எம்பிக்கான சீட்டுகள் ஒதுக்கப்படும் என்பது கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் எனவும் மேலும் பம்பர சின்னத்தில், நாங்கள் தேர்தல் களத்தில் நிற்பதற்கான வாய்ப்பு முதல்வர் ஸ்டாலின் அளிப்பார் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

  • Enforcement Directorate raids famous actor's house.. Arrest soon?பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!