‘அப்பா’ படத்திற்காக நானும் லஞ்சம் கொடுத்தேன்…. விஷாலை தொடர்ந்து சமுத்திரக்கனி பகீர் ; அடுத்தடுத்து வெளிவரும் புகார்!!

Author: Babu Lakshmanan
30 September 2023, 12:54 pm

அப்பா திரைப்படத்திற்கு பணம் கொடுத்துதான் டேக்ஸ் ஃப்ரீ வாங்கினேன் என திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்..

சேலத்தில் தனியார் உணவகம் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- ரிவ்யூ சொல்வது அவரவர் தனிப்பட்ட கருத்து, யார் ரிவ்யூ சொன்னாலும் போர்தொழில் போன்ற தரமான படங்கள் கண்டிப்பாக ஓடும் என்ற அவர், செல்போன் வைத்துள்ள அனைவரும் இன்று ரிவ்யூ சொல்ல ஆரம்பித்து விட்டனர், என்றார்.

நடிகர் விஷால் தனது திரைப்படத்திற்கு பணம் கொடுத்து சென்சார் போர்டில் சான்றிதழ் வாங்கிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சென்சார்போர்டில் இதுவரை தான் பணம் கொடுத்தது இல்லை. அப்பா திரைப்படத்திற்கு டேக்ஸ் ஃப்ரீ வாங்க பணம் கொடுத்தேன். அரசே எடுக்க வேண்டிய படத்தை தான் செலவழித்து எடுத்தும், பணம் கொடுத்து டேக்ஸ் ஃப்ரீ வாங்கியது வருத்தம் அளிக்கிறது, என வேதனை தெரிவித்தார்.

மேலும், தற்போது செல்போனில் கூட படம் எடுக்கலாம் என ஆகிவிட்டதால், ஆண்டுக்கு சுமார் 1000 திரைப்படங்கள் வெளியிட முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். காவிரிக்காக நிச்சயம் குரல் கொடுப்பேன் என்ற அவர், தனி மனிதனாக இதில் ஒன்றுமே செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 516

    0

    0