அறுவை மனைகளில் கட்டணக் கொள்ளை: கன்றுகுட்டிகளுடன் இறைச்சி விற்பனையாளர்கள் ஆட்சியரிடம் மனு!!
Author: Rajesh18 April 2022, 3:33 pm
கோவை: மாடு அறுவை மனைகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கன்றுகுட்டியுடன் இறைச்சி விற்பனையாளர்கள் மனு அளித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோவை சத்தி சாலை மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் மாடு அருவை மனைகள் செயல்பட்டு வருகின்றது.
இதில் காளை மாடு மற்றும் கன்றுகளை வெட்ட இறைச்சி விற்பனையாளர்கள் 10 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அருவை மனைகளை ஏலம் எடுத்துள்ள அஸ்லம் அலி மற்றும் இப்ரஹீம் பாதுஷா ஆகிய இருவரும், மாட்டுக்கு 300 முதல் 500 ரூபாய் வரையிலும், கன்றுகுட்டிகளுக்கு 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இதற்கு உரிய ரசீதுகளும் தருவதில்லை எனவும் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மனு அளிக்க வந்த விற்பனையாளர்கள் இரண்டு காளை கன்றுகளையும் அழைத்து வந்தனர். அதன் கழுத்துகளில் கட்டணக்கொள்ளை என எழுதிய பதாகைகளையும் தொங்க விட்டபடி மனு அளிக்க வந்தனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து இறைச்சி விற்பனையாளர்கள் புகார் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
0
0