தீயில் கருகிய நிலையில் மெக்கானிக் உடல் கண்டெடுப்பு : கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2022, 6:42 pm

கோவை : தீயில் உடல் கருகிய நிலையில் வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அடுத்த கோவில்பாளையம் அருகே உள்ள வெள்ளானைப்பட்டி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சோமசுந்தரம் இவரது மகன் சரவணகுமார் (வயது 24). திருமணமாகாதவர். மெக்கானிக்.

மேலும் இவர் மொபைல் பஞ்சர் வேலை செய்து வந்தார். நேற்று மாலை இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெள்ளானைபட்டியில் உள்ள காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

அங்கு சரவணகுமாரின் பைக் நின்றிருந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் சரவணக்குமார் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடனே அவர் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் தன்னைத் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது தீ வைத்து கொளுத்தி கொலை செய்தனரா? என கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரவணக்குமார் தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!