வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ‘மீடியா ட்ரீ’ : ‘INDIAN MADE EIFFEL TOWER’ ரேஸ்கோர்ஸில் விரைவில் திறப்பு…

Author: Babu Lakshmanan
22 October 2022, 7:12 pm

கோவையை மேலும் அலங்கரிக்கும் விதமாக, வண்ண விளக்குகளால் தயாராகி வரும் ‘மீடியா ட்ரீ’ விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் ஸ்மார்ட்சிட்டி நகரங்களாக மேம்படுத்தப்படும் நகரங்களில் கோவை மாநகரும் ஒன்று. கோவையில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களும் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

Coimbatore smart city - updatenews360

அதேபோல, ஆர்எஸ் புரம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட கோவையின் முக்கிய பகுதிகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளால் புதுப்பொலிவு பெற்று வருகிறது. இந்தத் திட்டப் பணிகளை அனுபவம் வாய்ந்த பொறியாளர்களின் மூலம் கே.சி.பி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Coimbatore smart city - updatenews360

ஏறத்தாழ பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அங்கு செல்லும் மக்களுக்கு நல்ல பொழுது போக்காக அவை அமைந்துள்ளன. குறிப்பாக, பெரியகுளம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஐ லவ் கோவை (I LOVE KOVAI) எனும் பெயர் பொறிக்கப்பட்ட சின்னம் கோவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

Coimbatore smart city - updatenews360

அந்த வகையில், தற்போது ரேஸ்கோர்ஸ் (RACE COURSE) மாடல் சாலையில் ‘மீடியா ட்ரீ’ (MEDIA TREE) என்னும் எல்இடி டவர் அமைக்கப்பட்டுள்ளது. 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் இந்த ‘மீடியா ட்ரீ’ திறக்கப்பட உள்ளது. மொத்தம் 5,000 எல்இடி விளக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த டவரின் மேல் பகுதியில் எல்இடி விளம்பரப் பலகையும் இடம்பெற உள்ளது.

Coimbatore smart city - updatenews360

கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஈவ்விள் டவர் என அழைக்கப்படும், இந்த மீடியா ட்ரீ பொதுமக்களை பெரிதும் கவரும் என்று மாநகராட்சி நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 494

    0

    0