மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை மறுநாள் துவக்கம்… மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

Author: Babu Lakshmanan
17 October 2022, 12:12 pm

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்க நாளை மறுநாள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவர் கலந்தாய்வு அட்டவணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அவர் கூறியதாவது :- 19 ஆம் தேதி (விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு) சிறப்பு பிரிவினருக்கு நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று மாலையை அவர்களுக்கான இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.

20ம் தேதி – அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது, அன்றே மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். 19ம் தேதி முதல் 25ம் தேதி பொது பிரிவினருக்கு இணைய வழி வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.

21ம் தேதி முதல் 27ம் தேதி வரை சுயநிதி நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளவர்களுக்கு இணையவழி வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. 26ம் தேதி முதல் சுற்று முடிவுகள் இணையவழியில் வெளியிடப்படும்.

27, 28 தேதிகளில் சான்றுகள் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. 30ம் தேதி முதல் சுற்று முடிவுகள் இணையவழியில் வெளியிட உள்ளனர்.
மாணவர்கள் முதல் சுற்று சேர்வதற்கு இறுதி நாள் தேசிய மருத்துவர் குழுமம் 28.10.2022 நடைபெற உள்ளது.

தமிழக அரசின் தேர்வு குழுமம் 4.11.2022 ஆம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாவது சுற்று கலந்தாய்வு 2.11.2022 முதல் 10.11.2022 வரை தேசிய மருத்துவ பிரிவினருக்கும், 7.11.2022 – 14.11.2022 வரை தமிழக அரசின் மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

இரண்டாம் சுற்றில் முடிவுகள் தேசிய மருத்துவ பிரிவினருக்கு 11.11. 2022 அன்றும், தமிழக அரசு மாணவர்களுக்கு 15.11. 2022 அன்றும் நடைபெற உள்ளது. இரண்டாம் சுற்றில் சேர்வதற்கு இறுதி நாள் தேசிய மருத்துவ பிரிவினருக்கு 18 தேதியும் தமிழக அரசு மாணவர்கள் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.

முதன்மை சுற்று தேசிய மருத்துவ பிரிவினருக்கு 23.11.2022 முதல் 1.12.2022 தேதி வரையிலும், தமிழக அரசு மாணவர்களுக்கு 6.12.2022 முதல் 12.12.2022 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முழுமை சுற்றில் சேர்வதற்கு இறுதி நாள் தேசிய மறுத்த பிரிவினருக்கு 10.12.2022 தமிழக அரசு மாணவர்களுக்கு 16.12.2022 நடைபெற உள்ளது.

விடுபட்ட காலியிடங்களுக்கான இறுதி சுற்று தேசிய மருத்துவ பிரிவுக்கு 12.12.2022 முதல் 14.12.2022 வரையும், தமிழக அரசு மாணவர்களுக்கு 17.12.2022 வரையும் நடைபெற உள்ளது. விடுபட்ட காலியிடங்களில் சேர்வதற்கு இறுதி நாள் 20.12.2022 அன்று தேசிய மருத்துவர் பிரிவினருக்கும், 20.12.2022 அன்று தமிழக அரசு மாணவர்களுக்கு நடைபெற உள்ளது.

2022-2023 இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 15.11.2022 அன்று கல்லூரி தொடங்குகிறது, எனக் கூறினார்.

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் மதுரையை சேர்ந்த திரிகேவ் 705 மதிப்பெண் எடுத்து, முதலிடம் பிடித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 418

    0

    0