டீ குடிக்க பைக்கில் வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.. நொடியில் நடந்த விபத்து : 2 மாணவர்கள் பரிதாப பலி!
Author: Udayachandran RadhaKrishnan29 March 2024, 9:06 am
பைக்கில் டீ குடிக்க வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.. நொடியில் நடந்த விபத்து : 2 மாணவர்கள் பரிதாப பலி!
பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் தனியார் சித்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்ஷித்தல் முண்டே வயது (21),ரிஷி கேஸ்ரமேஸ்வர் குட்டே(20)ஆகியோர் இரண்டாம் ஆண்டு படித்துவருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு பேரும்டீ குடிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில்
சென்றுவிட்டு திரும்பி கொண்டிருக்கும் போது கோவை- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் அரசம்பாளையம் பிரிவு அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் முன்பகுதியில் பலமாக மோதியதில் சம்பவ இடத்திலே இரண்டு கல்லூரி மாணவர்களும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் பலியானார்கள்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனம் மீது மோதிய வாகனத்தை நான்கு வழி சாலை அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனம் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.