‘சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்’: மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை..!!

Author: Rajesh
7 March 2022, 1:09 pm

கோவை: சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரியும், ஊதிய உயர்வு கோரியும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 150 பேர் பணியாற்றி வருகிறோம். எங்களது ஊதியம் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது ஏ.எல்.எஃப் என்ற குழு மூலமாக அனுப்பப்படுகிறது.

இதில் எங்கள் ஊதியத்தை எடுப்பது சிரமமாக உள்ளது. எனவே ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். மேலும், எங்களுக்கு ரூ.4500 மட்டுமே ஊதியம் கிடைக்கிறது. எங்கள் ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!