மலைபோல குவிந்த மருத்துவக் கழிவுகள்… சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ; நெல்லை அரசு மருத்துவமனையின் அவலம்..!!

Author: Babu Lakshmanan
4 July 2023, 2:55 pm

நெல்லை ; நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ஆபத்து மிகுந்த மருத்துவ கழிவுகள் எடுக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது

நெல்லை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் அமைந்துள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உள்நோயாளி மற்றும் வெளி நோயாளிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாள்தோறும் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில்,
இம்மருத்துவமனையின் வளாகத்தில் சுகாதாரமற்ற முறையில் மருத்துவ கழிவுகளை எரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. நெல்லையின் மாநகர் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த பல்நோக்கு மருத்துவமனையில் பலதரப்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இங்கு தினம்தோறும் அகற்றப்படும் மருத்துவ கழிவுகளை சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாக அப்புறப்படுத்தாமல், பல்நோக்கு மருத்துவமனையின் வளாகத்திற்கு பின்புறம் திறந்த வெளியில் எரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது.

அதன்படி, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிறுவனம் மருத்துவக் கழிவுகளை கிலோ 52 ரூபாய் வீதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள தனியார் கிடங்கில் வைத்து எரித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் தற்போது அந்த விதி மீறப்பட்டு அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே கழிவுகள் எரிக்கப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ச்சியாக இதுபோன்று திருநெல்வேலி பகுதியில் மருத்துவக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதும் பொது இடத்தில் எரிக்கப்படுவதும் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!