அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு… நோயாளிகளுக்கு NOC வழங்கும் மருத்துவமனை நிர்வாகம் ; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!!

Author: Babu Lakshmanan
16 December 2022, 4:17 pm

என் மீது எவ்வளவு வழக்குகள் போட்டாலும் எவ்வளவு பிரச்சனைகளை சிக்க வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சொத்துவரி, மின்சார கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி, அதை கண்டித்தும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது :- அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை தத்தளித்து வருகிறது.

ஐசியூவில் தமிழக சுகாதாரத்துறை உள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் இல்லாமல் வெளி மார்க்கெட்டில் வாங்க என்ஓசி கொடுத்து வருகிறார்கள். என் மீது எவ்வளவு வழக்குகள் போட்டாலும் எவ்வளவு பிரச்சனைகளை சிக்க வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, என தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!