பிரபல இயக்குனருடன் நெருக்கம் காட்டும் மீரா ஜாஸ்மின்.. இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறாரா.?

Author: Rajesh
28 May 2022, 6:53 pm

தமிழில் ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மீரா ஜாஸ்மின். மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், சில காதல் சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். அந்த வகையில் உச்ச நடிகையாக வலம் வந்தபோதே மாண்டலின் ராஜேஷ் என்பவருடன் அவர் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.

அந்த காதல் தோல்வியில் முடிந்ததை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்தார் மீரா ஜாஸ்மின். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிய மீரா ஜாஸ்மின், நடிப்புக்கும் முழுக்கு போட்டார். இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகிப்போயினர்.

இதையடுத்து 2 ஆண்டுகளிலேயே அவர் அவரது கணவரை பிரிய உள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் அதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. சமீபத்தில் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த மீரா ஜாஸ்மின், தாராளமாக கவர்ச்சி காட்டி தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார்.

இந்நிலையில், மலையாள இயக்குனர் அருண் கோபியை இருக்கமாக கட்டி அணைத்தவாரு நடிகை மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவரும் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 816

    0

    1