இளைஞருக்கு இப்படி ஒரு சாவா? தூங்க சென்றவருக்கு 10 கடி… நடுங்க வைத்த ஷாக் சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan17 April 2025, 4:01 pm
இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மீரட் பகுதியில் உள்ள அக்பர்பூர் சாடத் கிராமத்தை சேர்ந்த அமித் என்ற இளைஞருக்கு 30 வயது ஆகிறது. இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படியுங்க: போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!
கடந்த சனிக்கிழமை இரவு தூங்க சென்ற நிலையில், அதிகாலை 5 மணியளவில் அவரது குடும்பத்தினர் எழுப் அறைக்கு சென்றனர். அப்போது அவர் எந்த அசைவுமின்றி படுத்திருந்ததால் அவரை தட்டிப் பார்த்த பெற்றேர்கள் இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் அவரின் உடலின் கீழே பாம்பு சுருண்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் அருகில் உள்ளவர்களுக் தகவல் அளித்தனர். இளைஞர் அமித்தை 10 இடங்களில் பாம்பு கடித்திருந்தது தெரியவந்தது.

பாம்பு பிடி வீரரை அழைத்து பாம்பை மீட்டனர். அமித்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்க கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பிரதே பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பாம்பு கடித்து அமித் இறக்கவில்லை, அடித்து கொன்றுள்ளதாக அறிக்கை வெளியானதால் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் காத்திருந்தது.
அமித் மனைவி ரவிதாவுக்கு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இடையூறாக இருந்த கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்ய திட்டமிட்டு செய்தனர்.
கொலையை மறைக்க பாம்பாட்டியிடம் இருந்து 1000 ரூபாய்க்கு பாம்பு ஒன்றை வாங்கி அதை அமித் உடலுக்கு அருகில் வைத்துள்ளனர். பாம்பு கடிக்கான அறிகுறிகள் பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தபடவில்லை.