சைபர் கிரைம் அதிகாரி என கூறி மெகா மோசடி.. வடமாநிலத்துக்கே சென்று தட்டித் தூக்கிய தனிப்படை!
Author: Udayachandran RadhaKrishnan8 July 2024, 2:13 pm
கோவை சார்ந்தவர் ஜார்ஜ். இவரது அலைபேசிக்கு சைபர் கிரைம் போலீசார் என்ற பெயரில் அழைத்து, அவரின் வங்கி கணக்கில் சட்ட விரோதமான பண பரிவர்த்தனை நடந்து இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.
போலியாக ஆவணங்கள் தயாரித்து , ட்ரக் மாபியா கும்பல் பண பரிவர்த்தனை நடத்தி இருப்பதாக தெரிவித்த அவர்கள், அதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி இருக்கின்றனர்.
இந்த நிலையிலே இதனை மறுத்த ஜார்ஜிடம், நடந்த விவரங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, கிராஸ் செக் செய்ய வேண்டும் என எதிர் தரப்பில் அலைபேசியில் தெரிவித்து இருக்கின்றனர்.
அதற்காக 67 லட்சம் ரூபாயை அவரது சொந்த வங்கிக் கணக்கில் இருந்து, சைபர் கிரைம் போலீசார் பெயரில் பேசும் நபரின் வங்கி கணக்கிக்கு பணம் மாற்ற வேண்டும் என்றும் , அவ்வாறு செய்யும் பொழுது ஆர்.பி.ஐ. உதவியுடன் தாங்கள் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனை நம்பிய ஜார்ஜ் எதிர் தரப்பில் சைபர் கிரைம் போலீசார் என்று அழைத்த நபரின் வங்கி எண்ணுக்கு 67 லட்சம் ரூபாயை மாற்றி இருக்கின்றார். இந்த நிலையிலே மீண்டும் இதுகுறித்து விரிவாக கிராஸ் செக் செய்ய வேண்டும் என்றும், அதற்கு கூடுதலாக தொகை மாற்ற வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர்.
ட்ரக் மாஃபியாக கும்பலிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார் உதவுவதாக நினைத்த ஜார்ஜ், வங்கியில் சென்று பணத்தை மாற்ற பணிகளில் இறங்கி இருக்கின்றார். அப்பொழுது அங்கு வங்கி அதிகாரி, இதில் ஏதோ தவறு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார்.
உடனடியாக அவர் சைபர் க்ரைம் போலீசருக்கு சென்று புகார் தர வேண்டும் என தெரிவித்து இருக்கின்றார். இது குறித்து சிட்டி சைபர் கிரைம் போலீசில் ஜார்ஜ் தந்த புகாரி அடிப்படையில், கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், சிட்டி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அருண் தலைமையிலான போலீசார், மத்திய பிரதேசம் சென்று ஒரு வாரம் முகாமிட்டனர்.
ஜார்ஜ் பண பரிவர்த்தனை செய்த சைபர் கிரைம் கிரிமினல்கள் வங்கி கணக்கின் ஐ.பி அட்ரஸ் லொகேஷன் உள்ளிட்டவற்றை டிரேஸ் செய்த போலீசார் மூவரை கைது செய்தனர்.
தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட போலி சைபர் கிரைம் போலீசார் ரவிகுமார் சர்மா , முபில் சந்தல் , அனில் ஜதாவு சைபர் கிரைம் போலீசார் என்ற பெயரில் மோசடியை அரங்கேற்றியது காவல்துறை விசாரணையில் நூதன மோசடி விவரங்கள் தெரிய வந்தன.
சைபர் கிரைம் கும்பலிடம் இருந்து மூன்று செல்போன், இரண்டு லேப்டாப், ஐந்து சிம் கார்டுகள், வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்போக்குகள், கணினி ஹார்ட் டிஸ்க்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து இருக்கின்றனர்.
வங்கி கணக்குகளை முடக்கிய சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்க நடவடிக்கையில் இறங்கி இருக்கின்றனர்.
சைபர் கிரைம் போலீசார் என்ற பெயரில் போலி சைபர் கிரைம் கிரிமினல்கள் நூதன மோசடி அரங்கேற்று இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.