கூட்டுறவு வங்கியில் மெகா மோசடி.. டெபாசிட் தொகை கட்டினால் லோன் : விவசாயிகளுக்கு ‘அல்வா’ கொடுத்த அதிகாரிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan18 March 2022, 2:23 pm
கரூர் : விவசாயிகளுக்கு தெரியாமலையே லோன் வாங்கி மோசடி ஒருபுறம் நடந்து வரும் நிலையில் விவசாயிகள் பெயரில் டெபாசிட் வாங்கியதற்கு எந்த வித ரசீதும் தராமல் மோசடி செய்த அதிகாரிகளின் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒரு மெகா மோசடி ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது.
கூட்டுறவு சங்கத்தலைவர் சுப்பராயன், உபதலைவர் இ.கே என்கின்ற இ.கிருஷ்ணன், செயலாளர் தங்கவேல் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
அது என்னவென்றால், கூட்டுறவு வங்கியில் வரவு செலவு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒரு சிலர் லோன் வாங்காமலும், அவர்களது சிட்டா நகல் கொண்டு அந்த விவசாயிகள் 9 நபர்களுக்கு இவர்களே போலி கையெழுத்துக்கள் இட்டு சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க சுமார் 21 நபர்களிடமிருந்து டெபாசிட் தொகையாக சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் வாங்கியுள்ளனர். லோன் வந்து விட்டது ஆகையால் முன் கூட்டியே டெபாசிட் தொகை செலுத்தினால் மட்டுமே லோன் கிடைக்கும் என்று கூறியும் டெபாசிட் தொகையினை வாங்கி விட்டு எந்த வித ரசீதும் இல்லாமல் அந்த விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர்.
இதனையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சுமார் 15 தினங்களுக்கு முன்னர் புகார் தெரிவிக்க, அவர்கள் மூலம், கரூர் மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து கூட்டுறவு சங்க செயலாளர் தங்கவேல் என்பவரை கைது செய்துள்ளனர்.
கடந்த 15 தினங்களுக்கு முன்னர் ஆனால், கூட்டுறவு சங்கத்தலைவர் சுப்பராயன் மற்றும் உபதலைவர் இ.கே என்கின்ற இ.கிருஷ்ணன் என்பவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், 30 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அரசு மெத்தனம் காட்டி வருகின்றது என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகையினை வழங்கி, இது போல எத்தனை நபர்களை ஏமாற்றியுள்ளனர் என்பதனையும் காவல்துறையும் கரூர் மாவட்ட நிர்வாகமும் கண்டு பிடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்