800 கிடாக்கள்… குவியல் குவியலாக சோறு… சுட்டெரிக்கும் வெயிலில் சுட சுட கறிவிருந்து!!!

Author: Babu Lakshmanan
12 August 2022, 9:12 pm

800 கிடாக்கள் வெட்டப்பட்டு, குவியல் குவியலாக சோறு கொண்டு வரப்பட்டு ஆண்களுக்கு மட்டுமே விருந்து வைத்து தஞ்சையில் வழிபாடு நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தளிகைவிடுதி கிராமத்தில் நல்லபெரம அய்யனார் முத்துமுனி ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமையொட்டி கெடா வெட்டு பூஜை நடைபெற்றது. 200 ஆண்டுகளாக நடைபெறும் இந்த விழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர்.

இதில் அக்கரைவட்டம், சில்லத்தூர், வெட்டிக்காடு, திருவோணம், கறம்பக்குடி, தெற்கு கோட்டை, வடக்கு கோட்டை, கிளாமங்கலம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் விருந்தில் பங்கேற்றனர்.

மேலும் விருந்தினை முன்னிட்டு 800க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டி, பூஜைகள் செய்யப்பட்டது. அன்னதானத்திற்கு பத்த மேற்பட்ட வாகனங்களில் சோறு குவியல் குவியலாக கொண்டு வரப்பட்டு, சுட்டெரிக்கும் வெயிலில், தரையில் வாழை இழை போட்டு விருந்து வைக்கப்பட்டதை ஆண்கள் சுட சுட ருசித்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 763

    0

    0