இனி தரிசனம் செய்வது ஈஸி… திருச்செந்தூர் கோவிலில் விரைவில் மெகா திட்ட பணிகள் : அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 6:16 pm

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் மெகாதிட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

திருச்செந்தூர் சுப்ரமணிய திருக்கோவிலில் மெகா திட்டம் பணிகள் குறித்து இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு திட்ட பற்றி காணொளி மூலம் அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தினர்.

பின்னர் முப்பது கோடி ரூபாய் மதிப்பில் திருச்செந்தூரில் நடந்துவரும் யாத்திரை நிவாஸ் திட்டத்தின்படி கட்டப்பட்டு வரும் விடுதிகள் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து நான்கு பேட்டரி கார்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவங்கி வைத்தார். தொடர்ந்து பேட்டரி கார்களில் பயணித்து தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது, வெளிமாநிலங்களின் பல்வேறு கோவில்களுக்கு இணையாக திருச்செந்தூர் கோவிலில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் பக்தர்களின் தேவைகளை கேட்டறிந்து உள்ளோம். ஓரிரு மாதங்களில் மெகா திட்டம் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

பல்வேறு கோவில் திருப்பணிகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். திருச்செந்தூரில் பணிகளை முதல்வர் தொடங்கி வைப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் எனவும், சட்டப்பேரைவியில் அறிவித்த 12 திருக்கோவிலில் இன்று மாலை 108 பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை ஆரம்பிக்க படவுள்ளது என்றும், மெகா திட்ட பணிக்கு தனியார் நிறுவனம்(HCL)175கோடி ரூபாயும் பங்களிக்கிறது.

முழு திட்ட மதிப்பீடு தொகை முடிவு செய்த பிறகு இந்து சமய அறநிலையத்துறையும் பொதுமக்களின் பங்களிப்போடு மக்களின் எல்லா அடிப்படை வசதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

மேலும் வரும் காலங்களில் எந்த ஒரு குறையும் இல்லாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அவர் கூறினார். மேலும் யாத்ரி நிவாஸ் திட்ட பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…