குடியிருந்த குடிசை தீக்கிரையானது…வெட்ட வெளியில் சமைத்து உண்ணும் கூலித் தொழிலாளியின் குடும்பம்: உதவிக்கரம் நீட்ட அரசுக்கு கோரிக்கை..!!

Author: Rajesh
26 April 2022, 1:35 pm

திருவண்ணாமலை: செங்கம் அருகே குடியிருந்த குடிசை வீடு எரிந்ததால் வெட்ட வெளியில் சமைத்து உண்ணும் கூலித்தொழிலாளி வீடு கட்டித்தர கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கோபி. இவர் தனது மனைவி குழந்தைகளுடன் சிறிய குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் சம்பாதிக்கும் பணம் வயிற்றைக்கே சரியாக உள்ளதால் தனக்கென வீடு கட்ட பணம் இல்லாமல் நெடுங்காலமாக குடிசை வீட்டில் இருந்து வருகிறார்

இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் தங்கியிருந்த குடிசை வீடு எரிந்து சாம்பலாகிப் போனதால் வீட்டில் இருந்த தட்டுமுட்டு சாமான்கள் உள்பட தீயில் கருகியதால் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் தவித்த அக்குடும்பத்திற்க்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் அரிசி மளிகை பொருட்கள் உள்பட வழங்கினார்.

தற்போது வீடு இல்லாமல் தெருவில் சமைத்து உண்ணும் அவல நிலைக்கு தள்ளப்பட்ட கோபி தனக்கென பசுமை வீடு ஒன்று அரசு வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!